சூரிய பகவானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்

by Editor / 23-10-2021 07:21:40pm
சூரிய பகவானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

 தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது கோடான கோடி பலன்களை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்தகைய சூரியக் கடவுள் வழிபாடு குறித்து 'கொடிநிலை' என்ற பெயரால் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.


மேலும், சிலப்பதிகாரம் மற்றும் புராணங்களும் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய "காலம்' என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருவதாக கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்ததாகவும், ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளன.


ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கு, சக்கரம் இருப்பதால் வைஷ்ணவத்தில் சூரியனை "சூரிய நாராயணன்' என்று போற்றி வழிபடுகின்றனர்.


சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறப்படுகின்றன. சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் சூரியன் இருப்பதால் தான் சைவத்தில் "சிவ சூரியன்' என்று கூறி வழிபடுகின்றனர்.


சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பதுடன், இவைகளே வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.


முன்னதாக, இரவு தூங்கும் முன் ஒரு செப்புப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரையும், அதில் சில தானியங்களையும் அல்லது நவதானியங்களை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.


பின்னர் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பகவானுக்கு அந்த தண்ணீரை தினமும் சமர்ப்பிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கி புதிய வழி பிறக்கும் என்பது ஐதீகம்.
தினமும் கூறும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும், காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும், அறிவுத்திறனையும் கொடுத்து, வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.
'ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய பிரசோதயாத்'
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை, சூரிய உதய காலத்தில் சூரியனை வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து தினமும் 108 முறை சொல்லி வணங்க வேண்டும்.
'ஓம்அம் நமசிவாய
சூரிய தேவாய நம'
என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வணங்கலாம்.


உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்றி முழுவட்ட வடிவில் இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.இத்தரிசனத்தின் வாயிலாக கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஆத்ம பலம், மன பலம், தேக பலம் கிடைக்கும்.
எதையும் சந்திக்கும் மனதைரியம், ஆண்மை அதிகரிக்கும்.பேச்சாற்றல், அறிவாற்றல், நினைவாற்றல், சிந்தனாசக்தி அதிகரித்தல், நிர்வாகத்திறன் போன்றவை கிடைக்கும்.


முகத்தில் தேஜஸ், நல்ல வசீகரம் கிடைக்கும். எண்ணங்களுக்கு வலிமை உண்டாகும்.
எதிலும் வெற்றி பெறும் மன நிலை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும்.
தாழ்வு மனப்பான்மை நீங்கி எத்தகைய பிரச்சனைகளிலிருந்தும் வெற்றி பெற முடியும்.


கண் பார்வை சக்தி அதிகரித்தல், கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.
காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.

 

Tags :

Share via