அதிர்ச்சி வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் பலி!

by Editor / 27-05-2021 10:05:05am
அதிர்ச்சி வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் பலி!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த வேலூர் சேண்பாக்கத்தை சோந்த முருகானந்தம்(44) புதன்கிழமை உயிரிழந்தாா். மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.

கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னா் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபா்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பாா்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம்.

சா்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவா்கள், கரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவா்கள், நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவா்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள், புற்றுநோய், ஹெச்ஐவி நோயாளிகள் ஆகியோா் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் வேலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தற்போது 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவா்களுக்கு வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கருப்பு புஞ்சை பாதித்தவா்களில் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும் உள்ளதாகவும் அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேலூர் சேண்பாக்கத்தை சோந்தவா் முருகானந்தம். சமீபத்தில் கரோனா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முருகானந்தம், குணமடைந்து வீடு திரும்பி நிலையில், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்துநோய் பரவுவதை தடுப்பதற்காக அவரது இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை முருகானந்தம் உயிரிழந்தாா். வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்பட்ட முருகானந்தம் முதல் உயிரிழப்பாகும்.

 

Tags :

Share via