முதன்முதலாக தமிழர் துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு.

by Staff / 17-08-2025 08:55:02pm
முதன்முதலாக தமிழர் துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு.

என் டி ஏ வின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.கடந்த 2003-2006 வரை தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக பதவி வகித்துள்ளார். மத்திய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்த அவர் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்,தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார்.தமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் விரைவில் முதன் முதலாக குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு. (சி.பி.ராதாகிருஷ்ணன். )!
 

 

Tags : முதன்முதலாக தமிழர் துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு.

Share via

More stories