பிரமபுத்திரா நதியின் குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிஅடிக்கல் நாட்டினார்.

by Admin / 18-01-2026 04:04:29pm
பிரமபுத்திரா நதியின் குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிஅடிக்கல் நாட்டினார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பிரமபுத்திரா நதியின் குறுக்கே அமைய உள்ள காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 34.28 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நீளமான உயர்மட்ட வழித்தடங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,500 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கௌஹாத்தி மற்றும் மேல் அஸ்ஸாம் இடையே ஆன போக்குவரத்தை எளிமையாக்குவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற பாலும் முக்கிய பங்காற்றும். காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகள் குறிப்பாக காண்டாமிருகங்கள் வெள்ளை காலங்களில் சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகின்றது.

 

Tags :

Share via