சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

by Staff / 16-07-2023 12:23:43pm
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

மலையாளத்தில் கர்கிடக மாத பூஜைகளுக்காக (ஆடி மாதம்) சபரிமலை கோவில் நடை இன்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரா தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். பூஜைகள் ஜூலை 17 திங்கட்கிழமை முதல் கோவிலில் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை சன்னிதானம் திறக்கப்பட்டு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இதைத் தொடர்ந்து விநாயகர், நாகப்பெருமான் கோவில்கள் திறக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்படும். தொடக்க நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் இல்லை. இரவு 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo