இயற்கையை ரசிக்க கேரளமாநிலத்தில் கண்ணாடி பாலம். 

by Editor / 07-09-2023 09:49:54pm
இயற்கையை ரசிக்க கேரளமாநிலத்தில் கண்ணாடி பாலம். 

கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள  வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்  திறந்து வைத்தார், 120 அடி(40) மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

Tags : இயற்கையை ரசிக்க கேரளமாநிலத்தில்  கண்ணாடி பாலம். 

Share via