ஹெலிகாப்டர் விபத்து: உடல் கருகி 5 பேர் பலி

by Editor / 07-08-2024 04:26:34pm
ஹெலிகாப்டர் விபத்து: உடல் கருகி 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். காத்மாண்டு அருகே சென்றுகொண்டிருந்த சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த நிலையில், நுவாகாட் என்ற பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via