தமிழக முதலமைச்சர் விஜய் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை இங்கிலாந்து செல்கிறார்.
தமிழக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். செப்டம்பர் எட்டாம் தேதி உடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைவதை அடுத்து செப்டம்பர் 10 முதல் 16 வரை ஒரு வார காலம் இந்த சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை சந்தித்து முதலீட்டுக்கான ஆதரவு கோருகிறார். தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதி ,தொழில் தொடங்குவதற்கான சூழல்,அரசு வழங்கும் சலுகைகள் உள்ளிட்டவர்களை எடுத்துரைப்பதோடு உற்பத்தி துறை அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிதி சார்ந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுக்கவும் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும் முதலமைச்சருடன் வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் அதிகாரிகள் தொழில்துறை செயலாளர் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் உடன் செல்ல உள்ளனர்.
Tags :



















