மூ மு க மாநில இளைஞரணி துணை செயலாளர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆபாச வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. தற்கொலை முயற்சிக்கு காவல்துறைதான் காரணம் என்று கத்தி கூச்சலிட்டு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி உறவினர் தற்கொலை முயற்சித்ததால் பரபரப்பு. கில்லி பிரகாஷ் மீது குண்டத் தடுப்பு சட்டம் போடப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில் தற்கொலைக்கு முயற்சிக்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : மூ மு க மாநில இளைஞரணி துணை செயலாளர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.