மாவிளக்கின் ஒளியிலேயே வெங்கடாஜலபதி தம் பக்தர்களுக்கு புன்னகையாக காட்சி.......

by Admin / 21-09-2023 11:17:00am
மாவிளக்கின் ஒளியிலேயே வெங்கடாஜலபதி தம் பக்தர்களுக்கு புன்னகையாக காட்சி.......

புரட்டாசி மாசம் பிறந்து விட்டது. இந்த ஒரு மாதம் இந்துக்களின் புனித மாதமாககடைபிடிக்கப்படுகிறது .புரட்டாசி என்பது சூரியன்  கன்னி ராசியில் இருக்கும் மாதமாகும். புதனின்  அதிபதியாகவும்  இருக்கிறார். எனவே, புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமைகள் தோறும் ஸ்ரீ வெங்கடாஜலபதி வழிபாடு ,குறிப்பாக, சனிக்கிழமைகளில் அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.. பகவான் வெங்கடாஜலபதியை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்பையும் நல்ல வாழ்க்கையையும் அடைய முடியும் என்பதற்கு புரட்டாசி சனிக்கிழமை விரதங்கள் நிரூபித்திருக்கின்றன

.இந்த புரட்டாசியில் தான் வெங்கடாஜலபதி., திருப்பதி மலையில் ,பூமியாகிய விமானத்தில் மனித உருவில் அவதரித்தார் என்றும் சொல்லப்படுகிறது

.இந்த மாத சனி கிழமைகளில், சனி ஆனவர் தம் சக்தியை இழக்கிறார் என்று புராணங்கள் சொல்கின்றன.. சனிக்கிழமைகளில், வெங்கடாஜலபதியை வழிபடுவது அவரது அருளையும் ஆசீர்வாதங்களையும் முழுமையாக பெறுவதற்கு வழி வகுக்கிறது. அதோடு சனியினுடைய தீய விளைவுகளும் குறைந்து போவதாகவும் நம்பப்படுகிறது.

இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம், சடங்குகள் அனைத்தும் விஷ்ணு பக்தர்களின் விரத அனுஷ்டிப்புக் காலமாகவும் கடைபிடிக்கப்படுகிறது

. தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகவே பக்தர்கள் அசைவ உணவையும் மது... இன்னபிற, தீய பழக்கங்களையும் விடக்கூடிய மாதமாகவே, இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.

.. புரட்டாசி மாதத்தில் ,ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவிளக்கு நெய் விளக்கும் இயற்றப்பட்டால், அந்த மாவிளக்கின் ஒளியிலேயே வெங்கடாஜலபதி தம் பக்தர்களுக்கு புன்னகையாக காட்சி தந்து  சகல சௌபாக்கியங்களையும் அருள்வதாக நம்பப்படுகிறது.

 நல்ல ஆரோக்கியமும் செல்வமும் மகிழ்ச்சியும் சனியினுடைய எதிர்மறை விளைவுகளையும்  நீக்கி, நல்வாழ்வு- செழிப்பு அடைவதற்கு  புரட்டாசி மாதம் அமைவதாக புராணங்கள்  சொல்கின்றன..

 

Tags :

Share via