சந்திரயான்-3: மீண்டும் இயங்கத் தயாராகும் ரோவர்

by Staff / 21-09-2023 11:30:05am
சந்திரயான்-3: மீண்டும் இயங்கத் தயாராகும் ரோவர்

சந்திரயான்-3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி லேண்டர் மற்றும் ரோவரின் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரோ செப்டம்பர் 22ஆம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் பணிகளை மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது. நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால் சூரிய ஒளியால் மட்டுமே அதன் பேட்டரிகள் சார்ஜ் ஆகும்.

 

Tags :

Share via