தமிழ்நாடு அரசு திருவள்ளுவா் தின விருது வழங்கும் விழா- முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

by Admin / 16-01-2026 01:27:27pm
தமிழ்நாடு அரசு திருவள்ளுவா் தின விருது வழங்கும் விழா- முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

தமிழக அரசு திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு  ஆண்டு தோறும் தமிழ்மொழி மற்றும் சமூக வளர்ச்சிக்காக பாடுபட்ட சான்றோர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களுக்கு விருதை வழங்கி கௌரவப்படுத்தினார்.

திருவள்ளுவர் விருது முது முனைவர். மு பெ .சக்திவேல் முருகனார்.

பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகன்.

தமிழ் தென்றல் திரு.வி.க .விருது முது முனைவர் வெ. இறையன்பு

அண்ணல் அம்பேத்கர் விருது. சிந்தனைச் செல்வன்

தந்தை பெரியார் விருது. வழக்கறிஞர் அ .அருள்மொழி

பாவேந்தர் பாரதிதாசன் விருது. கவிஞர் யுக பாரதி

மகாகவி பாரதியார் விருது. கவிஞர் நெல்லை ஜெயந்தா

முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது. விடுதலை விரும்பி

பெருந்தலைவர் காமராசர் விருது. எம். எஸ் .இதயத்துல்லா

 கி .ஆ . பெ விஸ்வநாதன் விருது. எஸ் .செல்லப்பா

 இவ்விருதுகளைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் அஞ்சு லட்ச ரூபாய் காசோலை ஒரு சவரன் தங்கப்பதக்கம் தகுதி உரை மற்றும் பொன்னாடை வழங்கி முதலமைச்சர் சிறப்பித்தார். இந்நிகழ்வில் தமிழ் தென்றல் திருவிக விருது பெற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் வே இறையன்பு தனக்கு வழங்கப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் பரிசு தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

 

 

Tags :

Share via
Logo