நீதிபதி ஸ்ரீபதிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

by Staff / 14-02-2024 10:56:23am
நீதிபதி ஸ்ரீபதிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

முதல் பழங்குடியின நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தள பக்கத்தில் அவர், தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதியாக ஸ்ரீபதி அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவுமளிக்கிறது. பல தடைகளைக் கடந்து, கல்வியின் துணையோடு கடின உழைப்பால் சாதித்திருக்கும் அவர், தந்தை பெரியார் இட்டுச்சென்ற சமூகநீதிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக இருப்பார். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான நீதிக் குரலாக அவர் ஒலித்திட எனது அன்பும் வாழ்த்தும் என பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo