புதுபொலிவு அடையப்போகும் தென்காசி,விருதுநகர் ரயில் நிலையங்கள்
தென்காசி ரயில் நிலையம் அம்பித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கல் உள்ள நிலையில் அதற்கான ஆய்வு பணிகளை தென்னக ரயில்வே உடைய மதுரை கோட்டை மேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை ஐஜி ஆய்வு மேற்கொண்டனர்
நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அம்பித் பாரத் ஸ்டேசன் என்ற திட்டத்தினை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டம் மூலம் ரெயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கோட்டத்தில் விருதுநகர் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் கண்டறியப்பட்டு அவற்றிற்க்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன இது குறித்து தென்காசி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் மற்றும் பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் தென்காசி ரயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
அதன்படி, சிற்றுண்டி சாலை, திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், அலைக்கற்றை மேம்படுத்துதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் நவீன கழிப்பறைகள், தானியங்கி மாடி செல்லும் எஸ்கலேட்டர் வசதிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் ரெயில் நிலைய வளாகங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாளை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் தென்காசி மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு மத்திய ரயில்வே துறையால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வுகள் இன்று தென்காசி மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் நடை பெற்றது.
Tags :