மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 404 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

by Editor / 10-01-2023 09:08:00pm
மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 404 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர்  மேரி ஜெமிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்ட உட்கோட்ட தனிப்படை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் வாழவல்லான் ரோட்டில் உள்ள முட்புதர் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கூட்டாம்புளி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (40) என்பதும் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து முருகேசனை கைது செய்த போலீசார் அவர் பதுக்கிவைத்திருந்த 404 மதுபாட்டில்களையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via