நீதிமன்றம் பகுதியில் நடந்த கொலை:நெல்லைமாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை

by Editor / 22-12-2024 02:25:42pm
நீதிமன்றம் பகுதியில் நடந்த கொலை:நெல்லைமாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை போலீசார் கண்காணிப்பதோ அப்படியே கவனத்திற்கு வந்தாலும் கண்டு கொள்வதோ கிடையாது என்று 22.12.2024 ஆம் தேதியான இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது 

இது தொடர்பாக கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. 
திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயிலின் அருகே வைத்து மாயாண்டி என்பவரை கொலை செய்ததை குறிப்பிட்டு, வெவ்வேறு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டது சம்பந்தமாக திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைத்து விதமான சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வெவ்வேறு சமுதாயத்தினருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டு,  2024 ஆம் ஆண்டில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த 2023 ஆம் ஆண்டில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அனைத்து சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு இதுபோன்று தவறான பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  N. சிலம்பரசன்  தெரிவித்தார்.

 

Tags : நீதிமன்றம் பகுதியில் நடந்த கொலை:நெல்லைமாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை

Share via