இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை-சீமான்

by Editor / 22-12-2024 02:35:09pm
இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை-சீமான்

இஸ்லாமியர்களின் 6-வது கடமை திமுகவுக்கு ஓட்டு போடுவது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்கு தான் தெரியும். அவர்கள் 6-வது கடமை திமுகவுக்கு வாக்களிப்பது என்று முடிவில் இருக்கும் போது, இறைதூதரே வந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினாலும், நீங்கள் இறைதூதரே இல்லை என்று என் மக்கள் சொல்வார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.

 

Tags : இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை-சீமான்

Share via