தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச் 12ந்தேதி அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பொருள் பழக்கத்தை தடுத்த தவறிய தாக கூறி திமுக அரசுக்கு எதிராக இப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக வெற்றி கழக தலைமை கழக நிர்வாகிகள் நேரடியாக பங்கேற்பார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தில் கட்சியின் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்த நிலையில் ,இப்பொழுது அரசுக்கு எதிரான கண்டன போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















