தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற மகன்

சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), டிராக்டர் டிரைவர்.நேற்று அதிகாலை தலையில் பலத்த காயங்களுடன் சுரேஷ் அவரது வீட்டு முன்பு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷுக்கும், பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த கஸ்தூரி என்ற விதவைப் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் சுரேசை அடித்துக் கொன்று வீட்டு வாசலில் வீசி சென்றதாக கஸ்தூரியின் மகன் சந்துரு போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் சந்துருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :