தீயில் கருகிய 10 வயது சிறுமி - பிணமாக மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வீரனமலை பகுதியைச் சேர்ந்த கனகராஜின் மகள் ஹன்சிகா(10). ஹன்சிகா ஆம்பூரை அடுத்த வடகரை பகுதியில் உள்ள அத்தை வீட்டில் தங்கி 5ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியிலிருந்து திரும்பிய சிறுமி ஹன்சிகா, வீட்டின் விறகு அடுப்பு அருகே உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உமராபாத் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags :