ஆருத்ரா நிறுவன மோசடி - சிக்கிய பாஜக பிரமுகர்
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ. 12 கோடி கொடுத்துள்ளார். இதனால், மோசடி பணமான ரூ. 12 கோடியை வாங்கிய சுரேஷை விசாரிக்க போலீசார் தேடினர். ரூசோ கைதான தகவல் வெளியானதும், ஆர்.கே.சுரேஷ், துபாயிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனிடையே, போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
Tags :