கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது 30 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊருக்கு கிளக்கே ஈஸ்வரன் கோயில் என்னும் பகுதியில் பழனிச்சாமி என்பவர் மகன் பழனிக்குமார் என்பவரின் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி,அங்கு சென்று பார்த்தபோது கள்ளச்சாராயம் காய்ச்சியது உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக ராமகிருஷ்ணன்(47), பொன் இருளன் (40) ஆகிய இருவரை கைது செய்த போலீசார்,தலா 15 லிட்டர் வீதம் இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊரல்களை பறிமுதல் செய்தனர்.
Tags : கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது 30 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்.