நிகில் குப்தாவை நாடு கடத்த செக் குடியரசு நீதிமன்றம் ஒப்புதல்
காலிஸ்தான் பயங்கரவாதி மற்றும் தடை செய்யப்பட்ட 'நீதிக்கான சீக்கியர்கள்' தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த செக் குடியரசின் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு அந்நாட்டு நீதித்துறை அமைச்சகத்திடம் விடப்பட்டுள்ளது.
Tags :