விருதுநகர் சிறுமிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது .

by Writer / 24-01-2022 06:45:45pm
விருதுநகர் சிறுமிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது .

2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது, கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தீரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.  ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுக்காக நாடு முழுவதும் 29 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


இந்த விருது பெறும் குழந்தைகளுக்கு ஒரு பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ்கள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த ஆண்டு முதன்முறையாக இந்த விருது பெறுவோருக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த விசாலினி என்ற சிறுமி, வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்ததற்காக கண்டுபிடிப்பு பிரிவின் கீழ் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகி இருந்தார். இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் விசாலினி விருது மற்றும் ரொக்கப்பரிசு 1 லட்சம் ரூபாயை பெற்றார்.

 

Tags :

Share via