by Staff /
13-07-2023
05:21:41pm
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்திரப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் காணவில்லை என்றும், 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 492 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தால் ஏராளமான வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளன. ஜூன் 24ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.780 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது
Tags :
Share via