by Staff /
13-07-2023
05:12:14pm
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் கேம்ரான் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Tags :
Share via