கொரோனா 3வது அலை அக்டோபர், நவம்பரில் உச்சம் அடையும்: விஞ்ஞானிகள் குழு

by Editor / 04-07-2021 06:43:41pm
கொரோனா 3வது அலை அக்டோபர், நவம்பரில் உச்சம் அடையும்: விஞ்ஞானிகள் குழு

 

 

கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்றாமல் இருந்தால், 3வது அலை அக்டோபர்- நவம்பர் மாதங்களில் உச்சம் அடையும் என மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக கான்பூர் ஐஐடி அறிவியல் விஞ்ஞானியான மணிந்திரா அகர்வால், ஐஐடி ஐதராபாத்தின் அறிவியல் விஞ்ஞானி வித்யாசாகர் ஆகிய 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் 3வது அலை பாதிப்புகளை கணித ரீதியாகக் கணிக்கும் வகையில் இந்தக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 2வது அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

மத்திய அரசு தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்துவதால் 3-வது அலையின் தாக்கத்தை குறைக்கலாமே தவிர தடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர். 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3-வது அலை அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் உச்சமடையலாம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via