அமாவாசை முடிந்தவுடன் இதை செய்யுங்கள் !
மறைந்த முன்னோர்கள் தெய்வங்களுக்குச் சமமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தெய்வங்கள் கிடையாது. இந்த பூலோகத்தில் மனிதர்களாக பிறந்து கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து உயிரை விட்டவர்கள். இவர்களை தெய்வங்களாக நினைத்து வழிபடலாமே தவிர, அவர்கள் என்றுமே தெய்வங்களின் பட்டியலில் சேர்க்கப்படுவது கிடையாது.
அப்படியிருக்கும்போது அமாவாசை தினத்தில் இறந்தவர்களை நினைத்து பூஜை அறையில் நாம் வழிபாடு செய்கின்றோம். அதில் தவறொன்றும் கிடையாது இருப்பினும், அமாவாசை தினத்தில் முன்னோர்களது வழிபாட்டினை முடித்துவிட்டு, அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய நாளில், உங்கள் வீட்டு பூஜை அறையை நீங்கள் ஒருமுறை சுத்தம் செய்துவிட வேண்டும். அப்படி சுத்தம் செய்து விட்டு, அதன் பின்புதான் அடுத்த நாள் பூஜையைத் தொடங்க வேண்டும். அதாவது அடுத்த நாள் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வோம் அல்லவா, அதற்கு முன்பாக ஒருமுறை உங்களுடைய பூஜை அறையை மட்டும் சுத்தம் செய்து கொள்வது நல்லது என்று சொல்கிறது சாஸ்திரம்.
இறந்தவர்களுக்கு படையல் இட்ட அதே இடத்தில் சுத்தம் செய்யாமல் மற்ற தெய்வங்களை நினைத்து வழிபாடு செய்வது என்பது அவ்வளவு சரியான முறை அல்ல. நேற்று எல்லோர் வீட்டிலும் அம்மாவாசை பூஜையை அவரவர் வீட்டுப் பூஜை அறையில் சிறப்பாக செய்திருப்பீர்கள். இன்று பூஜை அறையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு, இறை வழிபாடு செய்வதற்கு முன்பு ஒருமுறை பூஜை அறையை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.இன்றளவும் நிறையபேர் இறந்த தங்களுடைய தாய் தந்தையரை இறைவனுக்கு இணையாக நினைத்துதான் வழிபாடு செய்கிறார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
இருப்பினும் இறந்தவர்களின் தாய் தந்தையரின் படத்தை பூஜை அறையில் சுவாமி படங்களுடன் சேர்த்து வைக்காமல், பூஜை அறையிலேயே தனியாக, மாட்டி வைத்து வழிபாடு செய்வது சிறந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது.இப்படி அமாவாசை முடிந்த மறுதினம் உங்களுடைய பூஜை அறையை மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு, உங்கள் பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நெய் விட்டு அல்லது நல்லெண்ணெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது உங்களுடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டு நல்ல பலனை பெறலாம்
Tags :