இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று

by Editor / 09-08-2021 04:51:47pm
இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 954 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 447 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 309 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.


கொரோனா தொற்றிலிருந்து 39 ஆயிரத்து 686 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 457 பேர் வீடு திரும்பி உள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 4 லட்சத்து 2,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மொத்த பாதிப்பு விகிதம் 2.35 சதவீதமாகவும் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.59 சதவீதமாகவும், கொரோனா மீட்பு விகிதம் 97.40 சதவீதமாக ஆக உள்ளது.

இதுவரை மொத்தம் 50 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது; 16 லட்சத்து 11 ஆயிரத்து 590 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளவில் 20.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 43,06 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.27 கோடி பேர் குணமடைந்தனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


அமெரிக்காவில் மொத்தம் 3.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,33,116 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 24,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 129 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் ஒரே நாளில் 13,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 388 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 2.01 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 470 பேர் ஆகும்.

 

Tags :

Share via