சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 111 பேர் பலி

by Staff / 19-12-2023 11:22:01am
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 111 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்தனர். கன்சூ மற்றும் கிங்சாய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன. இருமாகாண எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via