கஞ்சா வழக்கில் 5 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

by Editor / 22-04-2025 02:12:03pm
கஞ்சா வழக்கில் 5 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் சாமியாா்பட்டி பகுதியில் கடந்த 6.12.2019 அன்று 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் போஸ் (69), இவரது மகன் மணிமாறன் (40), நாகராஜன் (36), செல்வி (46), முருகன் (44), ரவி (41), குபேந்திரன் (40), சிவா (33) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் தந்தை போஸ், மகன் மணிமாறன், நாகராஜன், செல்வி, முருகன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். ரவி, குபேந்திரன், சிவா ஆகியோரை விடுவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

 

Tags :

Share via