எதிர்ப்பை மீறி துணை வேந்தர் மாநாடு நடத்தும் ஆளுநர்

ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் உதகையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் நடத்துவதாக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Tags :