ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். ரூ. 1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில், கீரனூரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ. 60.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. கொழுமன்கொண்டான் ஊராட்சியில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
Tags :