நாளைத்தொடங்குகிறது..அக்னி நட்சத்திரம்..

by Editor / 03-05-2022 02:32:42pm
நாளைத்தொடங்குகிறது..அக்னி நட்சத்திரம்..

ஆண்டுதோறும் கோடைக்காலமான ஏப்ரல் இறுதியிலோ..மே முதல் வாரத்திலோ அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம்.இந்தாண்டு அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை (மே 4ம் தேதி) தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் வெப்பாம் இருக்குமெனவும்,அனல் காற்றுடன் கூடிய வெயிலின் தாக்கம்  இருக்கும் என்பதால், இதனை நாம் கவனமாக கையாள வேண்டியது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், வயிற்று வலி, மயக்கம், சோர்வு என உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடும் வெயில், உயிரிழப்புக்கும் காரணமாகிவிடும் என்பதால் இதில் எச்சரிக்கை செலுத்துவதும்,குளிர்ந்த ஆகாரங்களை இளநீர்,கூல்,மோர்,லெமென் போஞ்,,பதனீர்,நுங்கு உள்ளிட்டவைகளை (குளிர்பானங்கள்அல்ல) பருகுவதும் மிக..மிக நன்று எனவும் இயற்க்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைத்தொடங்குகிறது..அக்னி நட்சத்திரம்..
 

Tags :

Share via

More stories

Logo