முதல்வர் இன்று சட்ட வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை. 

by Editor / 30-06-2023 08:54:36am
முதல்வர் இன்று சட்ட வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை.  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு 7 மணியளவில் அறிவித்தார். தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், 5 மணி நேரத்திற்குள்ளாக அந்த உத்தரவை நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியானது. இந்த சூழலில், இன்று சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories

Logo