முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவு ஆளுநர், முதல்வர்  உள்ளிட்டோர் இரங்கல் 

by Editor / 11-04-2023 07:35:36am
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவு ஆளுநர், முதல்வர்  உள்ளிட்டோர் இரங்கல் 

 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பணியாற்றியவர் நரேஷ் குப்தா. இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று மாலை, இறுதி சடங்கு நடைபெறுவதாக அவரது மகன் மகன் மனிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

நரேஷ் குப்தா மறைவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய நரேஷ் குப்தா, மக்களால் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா என கூறியுள்ளார். காந்தியப் பற்றாளர் நரேஷ் குப்தாவை இழந்து வாடும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo