உதயநிதிக்கு மம்தா கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட மத பிரிவினரின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என மேற்குவங்க முதல்வரும், TMC தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நாடு முழுதும் பேசும் பொருளாகியுள்ள சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அவர், "ஒவ்வொரு மதத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Tags :