10 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கல்லூரிக்கு சென்ற 17 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். சிறுமியின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார். ராஜேஷ் துபே (30) என்ற நபர் தன்னை அடைத்து வைத்து 10 நாட்கள் பலாத்காரம் செய்ததாக சிறுமி போலீசில் தெரிவித்துள்ளார். ராஜேஷ் துபே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :