தமிழ்நாட்டில் மதவாதம் எதிர்ப்பு சக்தி எங்குள்ளது? - முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்குள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், அந்த சம்பவம் நடந்தது உண்மைதான், ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மதவாதம் எந்த ரூபத்திலும் நுழைய முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.
Tags :