இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

by Staff / 02-12-2022 02:13:20pm
இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

கோவை சிவானந்தா காலனி பகுதியில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பால் விலை கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்வரும், அதமுக இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுகவை விமர்சிக்க ஒரு தகுதி இருக்க வேண்டும். ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு திமுகவின் 18 மாத கால ஆட்சியே சாட்சி. தமிழகத்தில் குடும்ப ஆட்சி, கம்பெனி ஆட்சி நடந்து வருகின்றனது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories