தமிழகத்தில் தீ விபத்தில் கருகிய 4 ஆயிரம் கோழிகள்

by Staff / 16-06-2024 05:27:11pm
தமிழகத்தில் தீ விபத்தில் கருகிய 4 ஆயிரம் கோழிகள்

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மாவட்டங்களில் முக்கியமானது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தின் வேட்டவலம் அருகே அமைந்துள்ள நாரையூர் கிராமம். இங்குள்ள ஒரு பெரிய கோழி பண்ணையில் இன்று (ஜூன் 16) மின் கசிவின் காரணமாக பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via