தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? நயினார் நாகேந்திரன் கண்டனம்

by Editor / 30-05-2025 01:22:55pm
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில், "தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது, பேருந்துக் கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றார்.

 

Tags :

Share via