ஹோலி பண்டிகை:குடும்பத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.

by Editor / 04-03-2023 03:45:31pm
ஹோலி பண்டிகை:குடும்பத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.


 பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சில வடமாநில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியதாக கூறப்படுகிறது. இதனை சிலர் திட்டமிட்டு பரப்பிவருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில் தமிழகத்தில் எந்த மாநில தொழிலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாக வில்லையென  தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து விசாரித்து, ஆலோசனை மேற்கொள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.இந்த குழு இன்று மாலை சென்னை வருகிறது.

இந்நிலையில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்ல, தாம்பரம் ரயில் நிலையத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, மார்ச் 8 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள், அதனை முன்னிட்டே தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதாக விளக்கம் அளித்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜஷித் நகருக்குச் செல்ல இருப்பதாகவும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஹோலி பண்டிகை:குடும்பத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.
 

Tags : Northern workers gathered at the railway station.

Share via