by Staff /
07-07-2023
05:42:16pm
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ரூ.1000 உரிமைத் தொகை தொடர்பான சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Tags :
Share via