திருச்சியில் தோண்ட தோண்ட வெளிவந்த ஐம்பொன் சிலைகள்
திருச்சி மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக குழிகள் தோண்டியபோது, அந்த குழிகளில் இருந்து ஐம்பொன்னால் ஆன ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் சிலைகள் கிடைத்துள்ளன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் சிலைகளை மீட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :