மேட்டூர் அணையின் நீர் இருப்பு தொடர்ந்து உயர்வு

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று 12,118 கன அடியாக வந்து கொண்டு இருந்த நீரின் அளவு இன்று 12,168 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்துக்காக அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி, கால்வாயில் 600 கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று 75.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 76.48 அடியாக உயர்ந்தது. மழை அதிகரித்து நீர்வரத்து கூடுதலாகும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :