‘சிம்பு நடிக்க கூடாது’ - ஐசரி கணேஷ் புகார்

by Staff / 10-05-2024 03:06:52pm
‘சிம்பு நடிக்க கூடாது’ - ஐசரி கணேஷ் புகார்

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக சமீபத்தில் புரோமோ வீடியோ வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். “நான் தயாரிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்தை சிம்பு நடித்து முடித்து கொடுக்கவில்லை. கொரோனா குமார் படத்தை முடிக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via