சின்ன சின்ன செய்திகள்..சில வரிகளில்..

by Editor / 25-11-2021 01:08:47pm
சின்ன சின்ன செய்திகள்..சில வரிகளில்..

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் மேலும் தாமதம் நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4.5 கி.மீ. உயரத்துக்கு நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாழ்வாக உள்ளதால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதுவரை உருவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் சாவு.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு
முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் ஐக்கியம்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி தலைமையில் 12 பேரும் இணைந்தனர். 

கோயம்பேட்டில் முதல் ரக தக்காளி ரூ.100லிருந்து ரூ.80, 2ம் ரக தக்காளி ரூ.100லிருந்து ரூ.70ஆக குறைவு.

சாதி வேறுபாடு இன்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சி.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நடைபெற்ற உள்ள பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்.

சட்ட விரோதமாக வனப் பகுதிக்குள் குயில்பறவைகளை பிடித்த நபர்கள் கைது

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன்-ஜோதிமணி எம்.பி.

திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி!. போலீசார் விசாரணை.

நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  மதியத்திற்கு மேல் பள்ளிகள் விடுமுறைபள்ளிகளை விட்டு மாணவர்களை வெளியே அனுப்பும் போது பாதுகாப்பை உறுதி செய்த பின்னர்,மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை - நெல்லை,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் 

 

Tags :

Share via