ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

by Admin / 18-09-2024 07:44:59pm
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 

 இந்தியா முழுவதற்கும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற மாநில சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த பாஜக அரசு திட்டம் வகுத்தது. இதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் சம்பந்தமாக பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்ய பணிக்கப்பட்டது .இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆன குழுவினர் அறிக்கையை தயார் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர் மூ விடம் அளித்தனர்..

நாட்டில் ஒரே நேரத்தில் பாராளுமன்ற- சட்டமன்ற- உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சி, சமூக ஒற்றுமை வலுவடையும் என்றும் ஜனநாயக கொள்கைகள் வலுப்பெறும் என்றும் ராம்நாத் குழுவின் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுஇக்.  குழுவின் பரிந்துரைகளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via