பெருமாளின் புனித மாதமாக கொண்டாடப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் ...

by Admin / 18-09-2024 04:49:12pm
பெருமாளின் புனித மாதமாக கொண்டாடப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் ...

பெருமாளின் புனித மாதமாக கொண்டாடப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் புலால் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை ஊர்கொள்ளும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

இந்த மாதத்தில் ஏன் மாமிச உணவை தவிர்க்க வேண்டும் என்று மதங்கள் சொல்கின்றன என்பதை நாம் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னதை நாம் அறிவோம். இப்படி இருக்கையில் எதன் பொருட்டு புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரியதாக போற்றப்படுகிறது வாழ்வியல் நடைமுறைகளில் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை உட்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

தென்பகுதிகளில் மழைக்காலம் தொடங்கி விடுவதனால் கோடை காலத்தை ஒட்டி வெப்ப மாறுதலுக்கு அந்தப் பகுதி உள்ளாவதால் சீதோசன மாற்றத்தின் காரணமாக மனிதர் உடல்களுக்கு நோய்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் வரும் என்பதற்காகவே இந்த மாதத்தில் புலால் உணவுகளை தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள்..

 

Tags :

Share via